பிள்ளையானை கைது செய்து தண்டிப்பதன் மூலம் ஈஸ்டர் தாக்குதலை திசை திருப்ப அனுர அரசு முற்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, உயிர்த்த ஞாயிறு தின சிறப்பு செய்தியில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் யார், அந்தக் கொடூரமான செயலுக்கு உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவது அவசரமான விடயம் என்று வலியுறுத்தியுள்ளது.
மிருகத்தனமான தாக்குதல் குறித்து சுயாதீனமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தால் சில நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் கவனிக்கிறோம்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம் என்றாலும், நியாயம் மற்றும் நீதியின் அடிப்படையில், விசாரணைகளின் இறுதி நோக்கம் குற்றவாளிகள் யார், அந்தக் கொடூரமான செயலில் உதவியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் இலங்கையில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, தெரிவித்துள்ளது.