தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் இலங்கையின் மிகப்பெரிய பால் சோற்றை தயாரித்துள்ளனர்.
சிறைச்சாலை சமையலறையில் பணிபுரியும் 50 கைதிகளின் உதவியுடன் பால் சோறு தயாரிக்கப்பட்டுள்ளது.
400 கிலோகிராம் பச்சை அரிசி மற்றும் 705 தேங்காய், 60 கிலோ வெங்காயம், 12 கிலோ காய்ந்த மிளகாய், 7 கிலோ பச்சை மிளகாய், 10 கிலோ தக்காளி மற்றும் தேசிக்காய், 30 கிலோ திரவ உப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாற் சோறு தயாரிக்கப்பட்டது.
வெலிக்கடையில் உள்ள கிட்டத்தட்ட 3300 ஆண் மற்றும் பெண் கைதிகள் இந்த உணவைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் 225 கிராம் பால் சோறு வழங்கப்பட்டது.
நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சுமார் 30,000 கைதிகளுக்கு பால் சோறு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது சிறைகளுக்குப் பின்னால் ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் அரிய தருணத்தைக் குறிக்கிறது என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஆணையர் காமினி பி. திசாநாயக்கவின் தெரிவித்துள்ளார்.