உள்ளுராட்சி தேர்தலில் பிரதேச சபைகளை கைபற்றிய பின்னர் டக்ளஸ் தேவானந்தா போன்ற குற்றவாளிகள் கைது செய்யப்படுவரென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தவர்களே தமிழர்களுக்கு துரோகமிழைத்தவர்கள், இவர்கள் துரோகிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
இன்று (16) யாழ்;ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தியை (NPP) தோற்கடிப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதுடன் எமது கட்சியின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக போலிப் பிரசாரம் செய்கின்றார்கள்.
இவர்களைப் பார்க்கும் போது எனக்கு கவலையாக இருக்கின்றது. விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயந்து இவர்கள் எங்கே இருந்தார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தவர்கள் எல்லோரும் தமிழர்களுக்கு துரோகமிழைத்துள்ளார்கள். துரோகிகள் பட்டியலில் இவர்கள் தான் சேர்க்கப்பட வேண்டும்.
உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இருப்பு கேள்விக்குறியாகும்.
டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன.பொதுமக்களது காணிகள் கடைகளை அவர் பிடித்து வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையில் புகார் செய்ய சொன்னால் கொலை செய்யப்பட்டுவிடுவோமென பயப்படுகின்றனர்.
எனினும் உள்ளுராட்சி தேர்தலில் பிரதேச சபைகளை கைபற்றிய பின்னர் டக்ளஸ் தேவானந்தா போன்ற குற்றவாளிகள் கைது செய்யப்படுவரென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.