முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார், அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்துவைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் நபர் ஒருவரை கடத்த உதவியது தொடர்பானதே இந்த குற்றச்சாட்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்புகாவல் உத்தரவு எந்த வகையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள உதயகம்மன்பில 2015 முதல் 2020 வரை பிள்ளையான் தடுத்துவைக்கப்பட்டிருந்ததால் அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விபரங்கள் தெரிந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி என எவராவது தெரிவித்தால் அது ஒரு சிறந்த நகைச்சுவை,ஏப்பிரல் பத்தாம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையான் உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விபரங்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்,12ம் திகதி மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்,எனினும் பிள்ளையானை நான் சென்று பார்த்தவேளை அரசாங்கம் தெரிவிப்பது போல பிள்ளையான் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து ஒரு சொல்கூட கதைக்கவில்லை என்பது தெரியவந்தது என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.