பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருட்டுத்தனமாக முற்பட்டமை அம்பலமாகியுள்ளது.எனினும் ரணில் முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பிள்ளையானுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும், தடுப்பு காவலில் உள்ள சந்தேகநபருடன் தொலைபேசியில் உரையாடுவது சட்டவிரோதமானது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிள்ளையான் கைதின் பின்னரான சூழலில் மகிந்த –கோத்தபாய இரகசிய சந்திப்பினை முன்னெடுத்ததாக மற்றொரு தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் தற்போது கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பிள்ளையானை சந்திக்கக கம்மன்பிலவிற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிள்ளையானின் சட்டத்தரணியாக கம்மன்பில செயற்படுவதால் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.