Home இலங்கை 6000 ரூபாவை பில்லியன் கடன் பெற்றுள்ள அநுர அரசாங்கம் ?

6000 ரூபாவை பில்லியன் கடன் பெற்றுள்ள அநுர அரசாங்கம் ?

by ilankai

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் 6ஆயிரம் பில்லியன் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் வாங்குவதற்காக நாட்டையும் மக்களையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அடகு வைக்கின்றது.

தொழில் செய்யாதவர்களால், விவசாயம் செய்யாதவர்களால், ஆகக் குறைந்தது சில்லறை கடை ஒன்றை நடத்திய அனுபவம் கூட இல்லாத குழுவினால் எவ்வாறு தொழில் வாய்ப்புகளை உருவாக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Articles