Home கொழும்பு ஓயாத அனுர வெடிகள்?

ஓயாத அனுர வெடிகள்?

by ilankai

இராணுவ புலனாய்வு பிரிவுடன் இணைந்து தமிழ் இளைஞர்களை கொலை செய்தமை மற்றும் ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய பிள்ளையானை இராணுவ புலனாய்வு பிரிவினரை கொலை செய்ய சதி தீட்டியதாக புதிய கதையை அவிழ்த்துவிட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி.

புதிதாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கதையில்

 முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 12 பேரை படுகொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி யுத்தத்தின் போது கிழக்கு மாகாணத்தில் இவருடைய வழிகாட்டுதலின் கீழ் இந்த இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலான அதிகாரிகள் தமிழ் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.

2006ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் (PTA) தற்போது 90 நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles