10
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலை விட நீர் காற்று சூரிய சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மலிவானது. தற்போதைய அரசாங்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என தேர்தல் காலத்தில் கூறியது. ஆனால் இன்று டீசல் மாபியாவுக்கும் அனல் மின் மாபியாவுக்கும் அடிபணிந்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து அனுமதிகளை தாமதப்படுத்தி டீசல் மின் உற்பத்தி நிலைய மாபியாவிற்கு இடம்கொடுத்து வருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.