Home கிளிநொச்சி வடக்கிற்கு ஆப்பு:மின்சாரம் வேண்டாமாம்!

வடக்கிற்கு ஆப்பு:மின்சாரம் வேண்டாமாம்!

by ilankai

இலங்கையின் வடபுலத்திலிருந்து சோலார் மூலமான மீள்புதுப்பிக்கதக்க மின் உற்பத்தியை கட்டுப்படுத்த அனுர அரசு திட்டமிட்டுள்ளது.

அவ்வகையில் வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கல சக்தியை பயன்படுத்துவோர் இன்று  13ஆம் திகதி தொடக்கம்  ஏப்ரல் 21ஆம் திகதி வரை நாளாந்தம் பகல் வேளைகளில்; முற்பகல் 10மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

இதனால் வடக்கிலிருந்தான மின் உற்பத்தியாளர்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர். 

புத்தாண்டு காலத்தில் மின்சார தேவை குறைந்துள்ளதாகவும், இதன் விளைவாக, தேசிய மின்சார கட்டமைப்பிற்கு மிகவும் மாறுபடும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பு தேசிய அமைப்பில் அசாதாரண அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.  

இதன் விளைவாக, அமைப்பின் செயலற்ற தன்மை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அதில் ஏற்படும் மிகச் சிறிய ஏற்ற இறக்கங்கள் கூட பகுதியளவிலான மின் தடை அல்லது நாடு தழுவிய மின் தடையை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, மேற்படி காலப்பகுதிக்குள் தேசிய மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க, தேசிய மின் கட்டமைப்பிலிருந்து சூரிய மின்கல சக்தி இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும் தற்போதைய கடும் வெயில் காலத்தில் வடக்கிலிருந்து மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் வடக்கிலிருந்தான மின் உற்பத்தியை முடக்கவே சதிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

Related Articles