Home இலங்கை மின் கட்டணத்தை குறைப்பதில் சிக்கல்

மின் கட்டணத்தை குறைப்பதில் சிக்கல்

by ilankai

செலவுகள் குறையாமல் மின்சார கட்டணங்களை மேலும் குறைப்பது, இலங்கை மின்சாரசபையின் நிதி செயல்திறனை கணிசமாக பாதிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணங்கள் 20% இனால் குறைக்கப்பட்டு கட்டண திருத்தம் ஒன்று செய்யப்பட்டது. 

இருப்பினும், இந்த திருத்தம் உண்மையான செலவுகளை எவ்வளவு பிரதிபலிக்கிறது என்பதில் இன்னும் தெளிவின்மை உள்ளது.

2024 இல் மின்சார கட்டணங்கள் இரு முறைகள் திருத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 21.9% மற்றும் ஜூலை மாதத்தில் 22.5% இனால் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கட்டணக் குறைப்பின் காரணமாக, வருடத்தின் இரண்டாவது பாதியில் மாதாந்திர இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விமர்சன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles