Home இலங்கை புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

by ilankai

புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் நலன் கருதி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

 கொழும்பு, மாக்கும்புர, கடுவெல, கடவத்தை ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து தங்களது பிரதேசங்களுக்குச் செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை பணிப்பாளர் திருமதி ஷெரீன் அத்துகோரள தெரிவித்துள்ளார். 

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பக்கூடும் என்பதால், அவர்களின் தேவை கருதி போக்குவரத்து சேவைகளை வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles