Home யாழ்ப்பாணம் தாங்கள் சந்தர்ப்பவாதிகள் அல்லவாம்

தாங்கள் சந்தர்ப்பவாதிகள் அல்லவாம்

by ilankai

நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை. எந்த வித பேதங்களும் இல்லாத ஒரு தாய் பிள்ளைகளே என வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்திருந்த அமைச்சர் விஜித ஹேரத் வர்த்தகர்களுடனான சந்திப்பிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் நேற்று கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது தனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும் எனக் கூறி பல இடங்களிலும் சிறிது நேரம் தமிழ் மொழியில் உரையாற்றியிருந்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கு தமிழில் பேசவே விரும்புகிறேன். எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும். அதனால் தமிழில் கொஞ்சம் உரையாற்றிவிட்டு தொடர்ந்து சிங்களத்திலும் கதைக்கிறேன்.

எங்களுக்கு   இன மத சாதி பேதமிஎல்லை. நாங்கள் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டும். ஏனெனில் நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளே. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் இல்லை – என்றார்.

Related Articles