Home யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் டிப்பர் விபத்து – மூதாட்டி உயிரிழப்பு

திருநெல்வேலியில் டிப்பர் விபத்து – மூதாட்டி உயிரிழப்பு

by ilankai

திருநெல்வேலியில் டிப்பர் விபத்து – மூதாட்டி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற டிப்பர் வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார் 

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சரவணபவன் மகேஸ்வரி (வயது 82) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார். 

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென வீதிக்கு செலுத்தப்பட்ட போது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதி அவர் மீது ஏறியுள்ளது. அதனால் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள கோப்பாய் போக்குவரத்து பொலிஸார் 33 வயதான டிப்பர் சாரதியை கைது செய்துள்ளனர். 

Related Articles