Home ஆஸ்திரேலியா ஆஸ்ரேலியாவில் 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருட்டுப் போனது!

ஆஸ்ரேலியாவில் 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருட்டுப் போனது!

by ilankai

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சிட்னி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே அங்குள்ள இணையதளத்தில் சிட்னி பல்கலைக்கழக மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விவரங்கள் கண்டறியப்பட்டன. அவை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது அங்கு பயிலும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த தகவல்களை மேற்கொண்டு பகிர தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles