Home யாழ்ப்பாணம் யாழில். போதை மாத்திரை மற்றும் போதைப்பாக்குடன் இளைஞன் கைது

யாழில். போதை மாத்திரை மற்றும் போதைப்பாக்குடன் இளைஞன் கைது

by ilankai

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை இளைஞனின் உடைமையில் இருந்து 94 போதை மாத்திரைகளும் , 465 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்கும் மீட்கப்பட்டுள்ளது 

கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட போதை பாக்கையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞனிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related Articles