4
யாழில். ஆலய வளாகங்களில் தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியினர் ஆலய வீதிகளில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதமர் ஹரிணி அமரசூரியர் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்திருந்தார்
அதன் போது, காரைநகர் கதிர்காம சுவாமி முருகன் கோவில், நீர்வேலி வாய்க்காற்றரவைப் பிள்ளையார் கோவில் ஆகியவற்றில் மக்கள் சந்திப்பு எனும் பெயரில் மேடைகள் அமைக்கப்பட்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.