Home யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சென்ற பக்தர்களை அதிகாலையில் “சோதித்த” பிரதமர் பாதுகாப்பு பிரிவு

மாவிட்டபுரம் சென்ற பக்தர்களை அதிகாலையில் “சோதித்த” பிரதமர் பாதுகாப்பு பிரிவு

by ilankai

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கினர்.

சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அந்நிலையில் ஆலயத்திற்கு பிரதமர் ஹரிணி அமரசூரியர் வருகை தரவுள்ளதாக தெரிவித்து, ஆலய சூழலில் பெருமளவான பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிபடையினர், பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டது.

அதிகாலை வேளையில் ஆலய வழிபாட்டிற்கு வருகை தந்த குருக்கள்மாரையும் பக்தர்களையும் கடுமையான உடற்சோதைனைக்கு உட்படுத்தியே ஆலய வளாகத்தினுள் அனுமதித்தனர்.

இதனால் ஆலயத்திற்கு செல்வோர் இன்னல்களை எதிர்கொண்டனர்.

கும்பாபிஷேக பெருவிழாவிற்கு வருகை தந்த தம்மை இவ்வாறு இன்னல் படுத்துவதற்கு பலரும் விசனங்களை தெரிவித்தனர்.

அத்துடன் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் சாப்பாத்துக்களுடன் நடமாடுவதையும் அவதானிக்க முடிந்தது.

Related Articles