Home மன்னார் புதைகுழிகள் பழகிப்போன தேசம்!

புதைகுழிகள் பழகிப்போன தேசம்!

by ilankai

ஆர்ஜென்டீனா சிலி போன்ற நாடுகளில் இராணுவ ஆட்சிக்காலத்தில் பலர் கொல்லப்பட்டனர்.ஆனால் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் மனித புதைகுழிகளைதோண்டும் விடயத்தில் மிகவும் நம்பகதன்மை மிக்க விதத்தில் செயற்பட்டனர்.பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவித்தனர்.மனித புதைகுழிகள் அகழப்படும்போது பொதுமக்கள் பார்க்ககூடிய நிலை கூட காணப்பட்டது.

ஆனால் எங்கள் நாட்டில் மனித புதைகுழிகளை தோண்டும்போது மக்களை ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லையென அம்பலப்படுத்தியுள்ளார் சிரேஸ்ட சட்டத்தரணி ரட்ணவேல்.

மன்னார் சதொச மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சட்டமா அதிபரின் தலையீட்டால் முடங்கின.இது அவருக்கு தொடர்பில்லாத விடயம்.

அரசாங்கம் மனிதபுதைகுழிகள் தோண்டப்படுவதை குழப்புவதற்கு பல வழிமுறைகளை கையாளும்,நிதியை விலக்கிக்கொள்வதன் மூலம் அகழ்வை குழப்பும்.அகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது  நிதி இல்லை என தெரிவிப்பார்கள்.

மீட்கப்படும் மனித எச்சங்கள் எந்த காலத்தை என்பதை அறிவதற்காக ஆய்வுகூடங்களிற்கு அனுப்பவேண்டும், வெளிநாட்டு ஆய்வு கூடங்களிற்கே அவற்றை அனுப்பவேண்டும்.ஆனால் அரசாங்கம் நிதி வழங்க மறுக்கின்றது.

செம்மணியில் 600க்கும் மேற்பட்ட உடல்கள் உள்ளதாக அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் இன்னமும் கருதுகின்றனர்.கைதுசெய்யப்பட்ட 600 பேரின் பெயர் விபரங்கள் அவர்களிடம் உள்ளன.இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர் என அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

எந்த அரசாங்கம் வந்தாலும்  அவர்கள் 100 வீத ஆதரவை வழங்க தயாரில்லையெனவும் ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

Related Articles