யாழ்.மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் இந்து ஆலயங்களில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
தேர்தல் பிரச்சார அல்லது ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக எந்தவொரு சமயத்தலத்தையோ, சமயத்தலமொன்றுக்குரித்தான காணியொன்றையோ, ஆதனமொன்றையோ பயன்படுத்துவதைத்தவிர்ந்து கொள்ளவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தலொன்றின் போது தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரினால் பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க நெறிக்கோவையில் அவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனினும் தேசிய மக்கள் சக்தியோ தாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. மக்கள் குறை கேட்கும் நிகழ்வையே முன்னெடுப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீர்வேலி கந்தசாமி கோவிலில் பதாதைகள் கட்டப்பட்டுள்ளமை தொடர்பில் முறைபாடு செய்திருந்ததாகவும் மேலும் பலரும்முறைப்பாடு செய்திருந்ததாகவும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தலைவர் நிரோஸ் தெரிவித்துள்ளார்.முறைப்பாட்டையடுத்து பாதாகைகள் மட்டுமே அகற்றப்பட்டன. வேட்பாளர்கள் கோவில் வளாகத்தில் பிரச்சாரம் செய்ய முடியாது என்றேன். தேர்தல் அதிகாரிகளும் ஆமோதித்தனர். பாதுகாப்பு தரப்புக்களின் அதிகரித்த பிரசன்னத்தில் வேட்பாளர்களும் மேடை ஏறி தம்மை அறிமுகப்படுத்திவாக்குக் கேட்பது முன்னெடுக்கப்பட்டதாகவும் நிரோஸ் மேலும் தெரிவித்துள்ளார்.