Home யாழ்ப்பாணம் யாழ் . நவக்கிரி சித்த வைத்தியசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியும் விடுவிப்பு

யாழ் . நவக்கிரி சித்த வைத்தியசாலைக்கு சொந்தமான 2 ஏக்கர் காணியும் விடுவிப்பு

by ilankai

யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். 

நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் கையகப்படுத்தி நிலை கொண்டிருந்தனர். 

அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை குறித்த காணியை மீள கையளித்துள்ளனர். 

சித்த மருத்துவமனைக்கு தேவையான மூலிகைகளை பயிரிடும் காணியாக குறித்த காணி காணப்பட்ட நிலையில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தினர் காணியை கையகப்படுத்தி கடந்த 30 ஆண்டு காலமாக நிலை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment

Related Articles