Home யாழ்ப்பாணம் பலாலி ஊடாக கே.கே.எஸ் வரையில் பேருந்து சேவைகள்

பலாலி ஊடாக கே.கே.எஸ் வரையில் பேருந்து சேவைகள்

by ilankai

யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக இன்றைய தினம் வியாழக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து, காங்கேசன்துறை – பலாலி – யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும் குறித்த வழித்தட பேருந்துகள் வசாவிளான் சந்தியில் அமைந்திருந்த இராணுவத்தின் வீதி தடையுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்திக்கொண்டன. 

தற்போது பாதை முழுமையாக திறக்கப்பட்டுள்ளமையால் , இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764ஆம் இலக்க வழித்தட பேருந்துகள் பலாலி வீதியூடாக பருத்தித்துறை – பொன்னாலை வீதியை சென்றடைந்து , அதனூடாக காங்கேசன்துறை சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் எனவும், அதன் மூலம் பலாலி வடக்கு , அந்தோணி புரம் , மயிலிட்டி மக்கள் குறித்த பேருந்து சேவை ஊடாக இலகுவாக யாழ்ப்பாண நகர் பகுதிக்கு தமது பயணத்தினை மேற்கொள்ள முடியும் எனவும் , இன்னமும் ஓரிரு நாட்களில் நேர அட்டவணைகள் தயார் ஆனதும் , பேருந்து சேவைகள் இடம்பெறும் என 764ம் இலக்க வழித்தட , தனியார் பேருந்து சேவையின் முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Articles