10
2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
இவருடன், இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும்.
அதனுடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
அந்தக் காலகட்டத்தில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.