கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் பெருவெற்றியை முற்கூட்டியே கட்டியம் கூறுகிறார்கள். சிறையிலிருந்தே தேர்தலில் வெற்றிச்சாதனை படைத்த பிள்ளையானை இது ஒன்றும் செய்துவிடாது. வடக்கிலிருந்து நாம் அவருக்கு ஆதரவாய் இருப்போம் என தகவல் வெளியிட்டுள்ளார் டக்ளஸ் தேவானந்தாவை நட்டாற்றில் விட்ட அவரது ஆலோசகர் கோடீஸ்வரன் றுசாங்கன்.
டக்ளஸ் தேவானந்தாவின் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து உண்ணிகள் செத்த நாயிலிருந்து கழல்வது போல அவரது ஆலோசகரான முன்னாள் ஊடகத்துறையாளர் கோடீஸ்வரன் றுசாங்கனும் கழன்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது பிள்ளையானிற்கு துண்டுவிரிக்க முற்பட்டு வடக்கிலிருந்து முற்பட்ட நிலையில் பிள்ளையானும் கைதாகியுள்ளார்.
உள்ளுராட்சி தேர்தல் பரபரப்பின் மத்தியில் கைதான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் மீதான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து வருகை தந்த கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08) இரவு பிள்ளையானை கைது செய்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கொக்குவிலை சேர்ந்த உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த பிள்ளையான் கோத்தபாயவின் தலையீட்டினால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.