நியூகேஸில் உள்ள A1 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. காவல்துறை மகிழுந்துகள் உட்பட ஐந்து மகிழுந்துகள் விபத்துக்குள்ளாகியுள்ளதை புகைப்படங்கள் காட்டுக்கின்றன.
இந்த விபத்து வடக்கு நோக்கிச் செல்லும் A1 நெடுஞ்சாலையின் சந்திப்பு 75 பதை மற்றும் டென்டன் பர்ன் ரவுண்டானாவிற்கு அருகில், பிஎஸ்டி நேரப்படி இன்று புதன்கிழமை அதிகாலை 02:30 மணியளவில் நடந்தது.
விபத்தில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
புகைப்படத்தில் ஒரு 4×4 கறுப்பு நிற மகிழுந்தும் கறுப்பு நிறம் உட்பட நான்கு காவல்துறை மகிழுந்துகளும் கடுமையான தேசங்களுக்கு உள்ளாகிக் காணப்படுகின்றன.
காவல்துறை விசாரணை முடியும் வரை வெளியேறும் சந்தி 73 மற்றும் வெளியேறும் சந்தி 75 க்கு இடையிலான சாலை பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுப்பாதைகள் உள்ளன என்று தேசிய நெடுஞ்சாலைகள் தெரிவித்தன.
காலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், டைன் நதியின் மீது மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வாகன ஓட்டிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். இதனால் ரெட்ஹீக் பாலத்தில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று, மேலும் டைன் சுரங்கப்பாதை வழியாக சுமார் 40 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது.