8
டொமினிகன் குடியரசின் தலைநகரில் உள்ள ஒரு இரவு விடுதியில் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். மேலும் 155 பேர் காயமடைந்தனர்.
இரவு நேரத்திற்குப் பின்னரும் அவசரகால குழுவினர் இடிபாடுகளில் இருந்து உயிர் பிழைத்தவர்களை மீட்க தீவிரமாக பணியாற்றி வந்தனர்.
இடிபாடுகளுக்குள் மேலும் 400 பேர் வரையில் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களைத் தேடி ஜெட் செட் இரவு விடுதியின் அருகே கூடியிருந்தனர்.
இறந்தவர்களில் ஒரு பிரபல பாடகர், ஒரு மாகாண ஆளுநர் மற்றும் முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரர் ஆக்டேவியோ டோட்டல் ஆகியோர் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.