Home இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பிடிக்க புதிய உத்தியாம்!

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பிடிக்க புதிய உத்தியாம்!

by ilankai

அரசியல் கைதிகள் என எவரும் இலங்கை சிறைகளில் இல்லையென அனுர அரசு விளக்கமளித்துள்ள நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பான அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

“காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இருப்பினும், விசாரணைகளை நாங்கள் தனிப்பட்ட அடிப்படையில் நடத்த முடியாது, அதுபோன்ற விடயங்கள் சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தீர்க்கப்பட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நிர்வாக மற்றும் அமைப்பு ரீதியான தோல்விகள்தான்  விடயங்களில் தாமதத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தன.எனவே, அவைபோன்ற பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும், ”எனவும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்..

மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வது குறித்த பரிந்துரைகளை வழங்க நீதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிடடுள்ளார்.

எனினும் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி வழங்கப்படுமென அரசு அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Articles