பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று அவர் மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பு 7இல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றி இருந்தபோது, பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பிள்ளையான் கைது செய்யப்பட்டதை அடுத்து மட்டக்களப்பில் பல இடங்களில் பட்டாசு கொளுத்திக் கொண்டாடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.