டிரம்ப் வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 84% வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 84% வரி விதிக்கப்படுவதாக சீனாவின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தப் புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி மதியம் 12:01 CST (05:00 BST) முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சகம் கூறுகிறது.
ஏற்கனவே சரிவில் இருந்த ஐரோப்பிய சந்தைகள், அமெரிக்க இறக்குமதிகளுக்கு சீனா 84% வரி விதித்ததைத் தொடர்ந்து மேலும் சரிந்தன.
இங்கிலாந்தில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனங்களின் FTSE 100 குறியீடு இன்று இதுவரை 3.3% சரிந்துள்ளது, அதே நேரத்தில் ஜெர்மன் டாக்ஸ் 4% மற்றும் பிரெஞ்சு Cac 40 4% சரிந்துள்ளன.
அமெரிக்க சந்தைகள் பிஎஸ்டி மதியம் 14:30 மணிக்கு திறக்கும்போது அதன் நிலைமை தெரியவரும்.