யேர்மனியின் டிரெஸ்டனின் வடமேற்கே உள்ள மெய்சென் மாவட்டத்தில் உள்ள க்ரோடிட்ஸ் நகரில் ஒரு கழிவுகளை சேகரிக்கும் உரத் தொட்டி ஒன்றில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட உடல்கள் ஒன்று பெண்ணினதும் மற்றொன்று ஆணினதும் என காவல்துறையினர் தொிவித்தனர்.
இறந்தவர்களின் அடையாளங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த உரத் தொடடி ஸ்டான்ஸ்பெர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.
இறந்தவர்கள் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அல்ல என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
வெளிப்புற விளைவுகள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் தற்போது இல்லை, ஆனால் தடயவியல் பரிசோதனைகள் இன்னும் நடந்து வருகின்றன. நாளை புதன்கிழமை விரைவில் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம் எனக் காவல்துறை தெரிவித்தது.
இந்த மரண விசாரணைகளை அரச சட்டவாளர்களும் காவல்துறையினரும் இணைந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது. பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், உடல்கள் நீண்ட காலமாக உரப் படுகையிலேயே இருந்ததாகவும், தற்செயலாக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
தற்போது காவல்துறையினர் அந்த இடத்தைப் பாதுகாத்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை புலனாய்வாளர்களும் தடயவியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் உரப் படுகையை ஆய்வு செய்தனர். இந்த நடவடிக்கை குறித்து தகவல்களை வழங்கக்கூடிய சாட்சிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.க்ரோடிட்ஸில் 7000 க்கும் குறைவான மக்கள் வசிக்கின்றனர்.