Home யாழ்ப்பாணம் பிரதேசசபையிலும் தேசியம்?

பிரதேசசபையிலும் தேசியம்?

by ilankai

தென் இலங்கைக்கு வேண்டுமானால் உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தல் ஒரு சாதாரண தேர்தலாக அமையலாம் ஆனால் வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் உள்ளூராட்சி மன்ற அதிகாரம் என்பது தமிழ் மக்களின் உரிமை போராட்டம் சார்ந்த பிரச்சனையென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். 

சிங்கள தேசியவாதம் விதைக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியவாதத்தை பாதுகாப்பதற்காகவும் தமிழ் மக்களின் இருப்புக்களை பாதுகாப்பதற்கான ஒரு தேர்தலாக உள்ளூர் ஆட்சி மன்ற தேர்தலை பார்க்க வேண்டும்.

2009 மே 18 உரிமை போராட்டம் மௌனிக்கக்கப்பட்ட பின் சிலர் உரிமைப்போராhட்டத்த்தை விலக்கி தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்ய ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்த கட்சிகளை மெல்ல மெல்ல உடைத்து சிங்கள தேசியத்திற்கு உயிரோட்டம் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். 

அவ்வாறான ஒரு சந்தர்ப்பமாக நல்லாட்சி அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்ட ஏக்கிய ராஜ்சிய என்ற ஒற்றை ஆட்சி அரசியலமைப்பை தமிழ் மக்களுக்கான தீர்வாக திணிக்க முயற்சியில் ஈடுபட்டார்கள். 

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை தமிழ் மக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியலில் இருந்து நீக்கி இருக்கின்ற நிலையிலும் ஏதோ ஒரு வகையில் சிங்கள தேசியவாதத்தை முன்னிலைப்படுத்துவதற்காக கட்சியின் பொதுச் செயலாளராக வந்துள்ளார். 

வீட்டில் இருக்கும் கிருமியை அகற்ற வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களுக்கு இருக்கின்ற நிலையில் அதற்கான முடிவுகளை அவர் சார்ந்த கட்சிக்கு வழங்க வேண்டும்

தமிழ் மக்களால் ஜனநாயக வாக்குகளின் அடிப்படையில்  நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று தமிழரசு கட்சியை ஆக்கிரமித்து உள்ள நிலையில் அதிலிருந்து விடுபட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கட்டி எழுப்புவதற்காக எம்முடன் பலர் கைகோத்துள்ளார்கள் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related Articles