Home மட்டக்களப்பு பிணை எடுக்க ஆட்களில்லை!

பிணை எடுக்க ஆட்களில்லை!

by ilankai

சிறையில் அடைக்கப்பட்டு;ள்ள முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணையில் பொறுப்பேற்க எவருமற்ற நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் மார்ச் 25ஆம் திகதி  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று செவ்வாய்க்கிழமை (௦8)  பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்படடிருந்தார்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, அவரது விளக்கமறியல் ஏப்ரல் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  வழக்கை, ஜூன் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற, செவ்வாய்க்கிழமை (08) மாலை வரையிலும் தவறியமையால், அவர், சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படடுள்ளார். 

Related Articles