இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஒரு விண்வெளி வீரருடன் ஒரு ரஷ்ய சோயுஸ் எம்எஸ்-27 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ஐஎஸ்எஸ்) இணைந்துள்ளதாக ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
செர்ஜி ரைஷிகோவ், அலெக்ஸி ஜூப்ரிட்ஸ்கி மற்றும் ஜானி கிம் ஆகிய மூவரும் டிசம்பர் 9 ஆம் தேதி பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு விண்வெளியில் 50 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர் என்று ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து காலை 10:47 மணிக்கு (0547 GMT) ஏவப்பட்டதைத் தொடர்ந்து, பூமியைச் சராசரியாக 400 கிலோமீட்டர் (250 மைல்) தொலைவில் சுற்றி வரும் ISS-க்கான விமானம் நான்கு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை எடுத்தது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடர்பாக சமீபத்திய ஆண்டுகளில் மாஸ்கோவிற்கும் வாஷிங்டனுக்கும் இடையே பதட்டங்கள் இருந்தபோதிலும் , விண்வெளித் திட்டங்கள் சில ஒத்துழைப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றிருப்பது , அமெரிக்க-ரஷ்ய உறவில் ஒரு மீண்டும் ஒரு சுமூகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் நீண்டகால நிதிப் பற்றாக்குறையால் போராடி வருகிறது. மேலும் ஆகஸ்ட் 2023 இல் லூனா-25 சந்திர ஆய்வுத் திட்டம் போன்ற தோல்வியுடன் சந்தித்துள்ளது.
1998 ஆம் ஆண்டு முதல் தொகுதி ஏவப்பட்ட ISS, 2000 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மக்கள் வசிக்கும் இடமாக இருந்து வருகிறது.
இந்த விண்வெளி நிலையம் ரஷ்யா மற்றும் அமெரிக்க பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களின் ஒத்துழைப்பில் இயங்குகிறது.