Home இந்தியா அதானிக்கு கொழும்பில் செங்கம்பளம்:வடக்கிற்கு இல்லை!

அதானிக்கு கொழும்பில் செங்கம்பளம்:வடக்கிற்கு இல்லை!

by ilankai

இந்திய அதானியின் வடக்கிற்கான முதலீட்டை அனுர அரசு திருப்பியுள்ள நிலையில் தெற்கில் தனது முதலீட்டு நடவடிக்கையினை அதானி ஆரம்பித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்து திரும்பிய கையுடன் இலங்கையில் தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது அதானி நிறுவனம்.

அதானி கொழும்பு துறைமுகத்தின் மேற்கு சர்வதேச முனையம் அதன் பணிகளை ஆரம்பித்திருப்பதாக அறிவித்துள்ளது.

கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தியை அரச – தனியார் கூட்டிணைவின் அடிப்படையில் இணைந்து முன்னெடுத்திருக்கும் அதானி நிறுவனம் மற்றும் இலங்கையின் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் செஸ் லிமிடெட் என்பன வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அபிவிருத்தித் திட்டத்துக்கென 800 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் அடைவாகும் என அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இம் முனையமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் எதிர்கால வர்த்தக மேம்பாட்டைக் காண்பிப்பதுடன் மாத்திரமன்றி, இலங்கைக்கு பெருமைமிகு முன்முயற்சியாகத் திகழ்வதாகவும் அதானி குறிப்பிட்டுள்ளார்

Related Articles