21
குருநாகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ – நால்வர் உயிரிழப்பு
குருநாகல் வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு குழாய் வெடித்ததன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருநாகல் நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீயை அணைத்ததாகவும் மேலும் நால்வர் தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது