2
வாக்குமூலம் பதிவு செய்ய நாமல் ராஜபக்ஷ சிஐடிக்கு வருகை
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய வந்துள்ளார்.
அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய தான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிஐடி முன் ஆஜராவது தனக்கு வழக்கமான நிகழ்வாகிவிட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.