3
யாழில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் 75 போதை மாத்திரைகளுடன் 18 வயதான இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞனை கைது சோதனையிட்ட போது இளைஞனின் உடைமையில் இருந்து 10 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 75 போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.