Home யாழ்ப்பாணம் யாழில், இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்

யாழில், இரண்டு சபைகளுக்கே வாக்காளர் அட்டைகள்

by ilankai

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளில் இரண்டு சபைகளுக்கே தபால் மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் வந்தடைந்துள்ளன என யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய இரு சபைகளுக்கே வந்துள்ளன. ஏனைய 15 சபைகளுக்குமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறவில்லை. அவை நீதிமன்ற அறிவுத்தலின் பின்னரே கிடைக்கப்பெறும்.

யாழ்ப்பாணத்தில் 21ஆயிரத்து 64 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் பருத்தித்துறை நகர சபையில், 463 பேறும் ,வேலணை பிரதேச சபையில் 305 பேருமாக 798 பேருக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகளே கிடைக்கப்பெற்றுள்ளன. 

ஏனைய 15 உள்ளூராட்சி சபைகள் தொடர்பாக நீதிமன்ற அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெற்ற பின்னரே அவற்றுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்தார். 

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன. 

Related Articles