Home கொழும்பு தேர்தல் சந்தேகம்:குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு!

தேர்தல் சந்தேகம்:குழப்பத்தில் தேர்தல் ஆணைக்குழு!

by ilankai

கொழும்பு மாநகரசபை உள்ளிட்ட சில உள்ளுராட்சி மன்றங்களது தேர்தல் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் மேன் முறையீட்டு நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 37 வழக்குகளும் எவை எனத் தெரியாது தேர்தல்கள் ஆணைக்குழு திண்டாட்டிவருகின்றது.அதனால் 114 சபைகளின் வாக்குச் சீட்டுகள் மட்டுமே தபாலிடப்படவுள்ளன.

மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைகளிற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர் வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கும் வகையில் அவற்றிற்கான வாக்குச் சீட்டுக்களை இன்றைய தினம் தபாலிட வேண்டும். இருந்தபோதும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் 37 வேட்பு மனுக்களை ஏற்குமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றை நாடத் தீர்மானித்தமோதும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ள வேட்பு மனுக்கள் எந்த சபையில் எந்தக் கட்சியினது என்ற விபரங்கள் ஏதும் நேற்று வரை ஆணைக் குழுவிற்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை.

இதன் காரணமாக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட எந்தச் சபையினது வாக்குச் சீட்டும் இன்று காலையில் நபாலிடப்பட மாட்டாது எனவும் இலங்கையின் 336 பிரதேச சபைகளில் வெறுமனே 114 சபைகளிற்கான வாக்குச் சீட்டுக்களே இன்று காலை தபாலிடப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணைப் பிரதேச சபை என்பனவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச சபை ஆகியவற்றிற்கும் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் மற்றும் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகியவற்றினதும், மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவற்றின் வாக்குச் சீட்டுக்கள் மட்டுமே  தபாலிடப்பட்டுள்ளது.

Related Articles