Home யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்வாய்வு – நிதி விடுவிப்பில் இழுபறி

செம்மணியில் அகழ்வாய்வு – நிதி விடுவிப்பில் இழுபறி

by ilankai

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானத்தில் மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியில் மேலதிக அகழ்வு பணிகளை முன்னெடுக்க நிதி விடுப்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுவதாக யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு  தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் உள்ள இந்து மயானம் ஒன்றில் மின்தகன மேடை அமைப்பதற்காக குழி தோண்டிய போது மனித என்புக்கூட்டு சிதிலங்கள் மீட்கப்பட்டன. 

அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , அப்பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகளை நீதிமன்ற உத்தரவின் பேரில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

அந்நிலையில் அதற்கான நிதி விடுப்பில் தொடர்ந்தும் இழுபறி காணப்படுவதால் ,  அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , மன்றில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து , வழக்கு எதிர்வரும் 21ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. 

Related Articles