ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்காக இந்திய பிரதமர் நரேந்திரமோடி நாளை (06) ராமேஸ்வரம் செல்லவுள்ள நிலையில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு, சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகொப்டர், மண்டபம் ஹெலிபாட் தளத்தில் தரையிறக்கப்படுகிறது. அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலம் வருகை தந்து அங்கிருந்து தூக்குப்பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதையடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் பாம்பனில் உள்ள ஹெலிபேட் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். மேலும், பிரதமர் வருகையால் மீனவர்கள் 6ம் திகதி வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.