பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய மித்ர விபூஷணா விருது.. கவுரவித்த அதிபர் அநுர குமார திசநாயக!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 5 Apr 2025, 1:01 pm
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டுள்ளது. அதிபர் அநுர குமார திசநாயக பிரதமர் மோடிக்கு இந்த உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளார். Samayam Tamil
பிரதமர் மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று இரவு இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கதில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி மற்றும் அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருதான மித்ர விபூஷணா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயக வழங்கி கவுரவித்தார்.
ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க