2
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்தமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷன் சந்திரஜித் உட்பட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்
கடந்த மாதம் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போது இவர்கள் இருவர் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைத்த இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தை சேர்ந்த 25 பேர் முன்னதாகவே பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.