Home இலங்கை மோடிக்காக இலங்கையில் மூடப்படும் வீதிகள்

மோடிக்காக இலங்கையில் மூடப்படும் வீதிகள்

by ilankai

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு கொழும்பு மற்றும் பல பகுதிகளில் விசேட போக்குவரத்து மற்றும் விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதிகள் மூடப்படவுள்ளது.

இந்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், ஏப்ரல் 5 ஆம் திகதி, கொழும்பின் காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லை அபேகம வளாக வீதிகள் மூடப்படவுள்ளது.

இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்திற்கு அனைத்து வாகன சாரதிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்  

Related Articles