இலங்கையில் வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான உத்தரவு நாளை வெள்ளிக்கிழமை (04) வழங்கப்படும் என்று கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதியரசர் எம்.டி. முகமது லாஃபர் மற்றும் நீதியரசர் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இன்று வியாழக்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் விசாரணையினையடுத்து நாளை வெள்ளிக்கிழமை ரிட் மனுக்கள் மீதான உத்தரவு பிறப்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்களில் வயதை உறுதிப்படுத்த இணைக்கப்பட்ட பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை உறுதிப்படுத்த தவறியமை தொடர்பில் சர்ச்சைகள் தொடர்கின்றன.
குறிப்பாக யாழ்.மாநகரசபை உள்ளிட்ட முன்னணி சபைகள் பலவற்றிற்கான வேட்பு மனுக்கள் வடக்கில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிறப்பு அத்தாட்சிப்பத்திர பிரதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதும் பின்னர் தெளிவற்ற அறிவுறுத்தல் காரணமாக நாளைய தீர்ப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.