வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில்,அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது வேட்பு மனுவுடன் ‘அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுதல்’ என்ற நிபந்தனை பூர்த்தி செய்யப்படாமை தொடர்பாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவை அல்லாத ஏனைய விடயங்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்மானம் நாளையதினம் எடுக்கப்படும் என்றும், அதுவரையில் அதனுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.