உள்ளுர் பொறிமுறை மூலமாகவே போர்க்குற்றங்களை விசாரிப்பதென்பதில் அனுர அரசும் விடாப்பிடியாக உள்ளது.
இந்நிலையில் கருணா உள்ளிட்ட இலங்கையர்கள் நால்வருக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் அண்மையில் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்;ட தீர்மானம் தொடர்பாக அனுர அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக கட்;டமைப்புடன் கூடிய அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குழுவின் பணிகளுக்கு தேவையெனக் கருதுகின்ற, விடயம் தொடர்பான நிபுணத்துவத்துவம் மிக்க வேறெந்த அதிகாரியோஃநிபுணர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவுக்கு அதிகாரமளிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சண நாணயக்கார, பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.