இவ்வாண்டினில் மாகாணசபை தேர்தல்கள் நடைபெறாதென அனுர அரசு அறிவித்துள்ளது.இந்திய பிரதமர் மோடி இவ்வாரம் இலங்கை வர உள்ள நிலையில் தேர்தல் இல்லையென்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால்இ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அனுர அரசின் ஊடகப்பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எல்லா நேரங்களிலும் தேர்தல்களை நடத்திக் கொண்டே இருக்க முடியாதுஇ அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்.
“உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகுஇ பிரதான தேர்தல்கள் முடிவடையும். மாகாண சபைத் தேர்தல் மட்டுமே நடத்தப்பட உள்ளன. சில சட்டங்களை மாற்ற வேண்டியிருப்பதாலும்இ நாட்டின் அபிவிருத்திக்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாதுஇ” என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழ் தரப்புக்கள் மாகாணசபை தேர்தலை வலியுறுத்திவருவகின்றன.எனினும் தேசிய மக்கள் சக்தி மாகாணசபை பொறிமுறை இனப்பிரச்சினைக்கு தீர்வாகாதென தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.