9
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பாக வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ள உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை நாளை (02) வரை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுக்களை பரிசீலித்த பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.