9
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
நெளுக்குளம் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆணா பெண்ணா என்று அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் இருந்து ஆண்கள் அணியும் மேல் ஆடை ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.