Home யாழ்ப்பாணம் யாழ் . பல்கலை பகிடிவதை – குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ; ரஜீவன் எம்.பி வலியுறுத்தல்

யாழ் . பல்கலை பகிடிவதை – குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் ; ரஜீவன் எம்.பி வலியுறுத்தல்

by ilankai

ராக்கிங் என்ற போர்வையில் நடக்கும் வன்முறை – யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவரின் எதிர்பாராத துயரத்திற்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை இழந்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு , மனிதவுரிமை ஆணைக்குழு உள்ளிட்டவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளார். 

இந்நிலையில் குறித்த சம்பவத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கண்டித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   

புதுமுக மாணவன் மீது சிரேஷ்ட மாணவர்கள் தலைக்கவசத்தால் தாக்கி சித்திரவதை செய்ததன் விளைவாக, அவர் கேட்கும் திறனை இழந்துள்ளார்.

 இது மாணவர்களின் பாதுகாப்பு குறித்து உரிய தரப்பு மீது கேள்விகளை எழுப்புகின்றேன்.

இந்த நாகரிகமற்ற செயல் தண்டிக்கப்பட வேண்டும். சக மாணவரை உடல்ரீதியாகவும் மனதளவிலும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த பயங்கரமான கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.

மாணவர் மீது நடக்கும் எந்தவொரு வன்முறையையும் தடுக்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய அதிகாரிகள் உடனடியாக முந்திய சம்பவங்களை விசாரித்து, குற்றவாளிகளை தக்க தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.

மாணவர்களை சித்திரவதை செய்யும் மரபு இனி எதுவும் நடக்கக்கூடாது. சக மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கீழ்த்தரமான செயல்களை ஒழிக்க தேவையான கடுமையான சட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்க வேண்டும் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Articles